Perambalur old Court Vinayagar Temple in the Maha kumabishegam: MLA R.Tamilselvan participated
பெரம்பலூரில் கச்சேரி வினாயகர் கோவில் மகா கும்பாபிசேகம் வெகுவிமரிசையாக நடந்தது.
பெரம்பலூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வட்டாசியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள கச்சேரி வினாயகர் கோவிலில் வரசித்தி வினாயகர், நவகிரக சன்னதிகள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிசேகவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிசேகத்தை முன்னிட்டு 26-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதிஹோமம் மற்றும் வாஸ்துசாந்தியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
இன்று காலை யாகசாலையில் இருந்து புனிதநீர் நிரப்பப்பட்ட கும்ப குடங்களை; சிவாச்சாரியார்கள் குழுவினர் எடுத்துச் சென்று மூலவர் விமானம் மற்றும் நவக்கிரக விமானங்களின் கும்பங்களுக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க புனிதநீர் ஊற்றி அபிசேகம் செய்தனர்.
கும்பாபிசேக விழாவில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. இரா. தமிழ்ச்செல்வன், தந்தை ரோவர் கல்விக் குழுமத்தின் மேலாண் தலைவர் வரதராஜன், தர்ம பரிபாலன சங்க தலைவர் ராஜா ஸ்டோர் பழனியாண்டி, அறிவுத் திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் சந்திரசேகரன், அரிமா சங்க சாசனத் தலைவர் ராஜாராம், சாசன செயலாளர் அருணாசலம் மற்றும் தினசரி மார்க்கெட் வியாபாரிகள், பழைய பேருந்து நிலைய வியாபாரிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது.
கும்பாபிசேக விழா ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலையத் துறையினருடன் இணைந்து திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.