Perambalur: Project to bring water from Thondamanthurai Kallar to Vengalam Lake; Recommendation for authorities to Study!

File Copy
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டைமாந்துறை மேற்குப் பகுதியில் பச்சமலைத் தொடர் சுமார் 12 கி.மீ உள்ளது. இதில், பிரதானமாக கோரையாறு பகுதியில் கல்லாறு உற்பத்தியாகி வெள்ளாற்றில் கலந்து கடலில் கலக்கிறது. தற்போது வெங்கலம் ஊராட்சியில் பெரிய ஏரி உள்ளது. அதன் தெற்கே முருகன் கோயில் மலை உள்ளது. அங்கு தொடர்ந்து குவாரிக்காக கற்கள் பாதாளம் வரை வெட்டி எடுக்கப்படுவதால் ஏரிக்கு நீர் வரத்து மலையே ஏரியாக மாறி மழைநீர் தேங்கி கிடக்கிறது. ஆளும், மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி கிரஷர்கள் பொது மக்கள் யாரும் அவர்களை எதிர்க்க முடியாது. அப்படி எதிர்த்தால் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியாகிவிடுவார்கள். மேலும், தொண்டைமாந்துறை மலை அருகே விசுவக்குடி நீர்த்தேக்கமும் உள்ளது. தற்போது விசுவக்குடி நீர்த்தேக்கத்தாலும், பச்சமலையில் இருந்து வரும் மழை வெள்ளம் வெங்கலம் பெரிய ஏரிக்கு வருவது தடைப்பட்டுள்ளது. இதனால், ஏரியை நம்பி விவசாயம் செய்யும் உழவர்கள் பாதிக்கப்படைந்தனர். இதனால், கிருஷ்ணாபுரம், வெங்கலம் பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைய காரணமாகிவிட்ட காரணமாக கூறப்படுகிறது.
இது குறித்து, கிருஷ்ணாபுரத்தை தங்கராஜ் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, வெங்கலம் ஏரிக்கு, தொண்டைமாந்துறை வழியாக பாயும் கல்லாற்றில் இருந்து வெங்கலம் ஏரிக்கு ஆற்று நீர் கொண்டு வரவும், கிருஷ்ணாபுரம் பகுதியில் கல்லாற்றில் புதிய தடுப்பணை கட்டவும் கோரியிருந்தார். இது குறித்து தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் பொதுப் பணித்றை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இத்திட்டம் நிறைவேற்ற சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். தனிமனிதன் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கொடுத்த மனுவிற்கு அரசு நடவடிக்கை பாராட்டுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், திட்டம், ஓரிரு ஆண்டுக்களுக்குள் தொடங்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் தடுப்பணை சுமார் 2 கோடி மதிப்பிலும், வெங்கலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர சுமார் 10 கோடியும் ஒதுக்கப்படும் என தெரிய வந்துள்ளது.