Perambalur: Sales of bananas ripened in ethylene have increased; Public demands action by the Food Safety Department to stop this!

பெரம்பலூர் மாவட்டத்தில் வாழைப்பழங்கள், தோட்டம், மற்றும் வணிகர்கள் வழியாக கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாழைப்பழங்கள் பெரும்பான்மையானவை எத்திலீன், எத்திலீன் ஆக்சைடு, வாயுக்களாலும், மருந்துகளில் முக்கி வாழைத்தாரை எடுப்பதன் மூலம் வாழைப்பழங்கள் இயற்கையாக பழுத்து கனியாவதற்கு பதிலாக செயற்கை வேகமாக பழுக்கிறது. இதனால், வாழைக்காய்கள், பழுத்த பழங்களை போல காட்சி தருகிறது. காம்புகள் பச்சையாகவும், தோல் பழுத்த தோற்றத்தில் மஞ்சளாகவும் காட்சி அளிக்கிறது. எத்தலீன் மூலம் பழங்களை பழுக்க வைப்பதால், பூச்சிகள் பழங்களை தாக்க வராது. இது விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஒன்றாகும். எத்தலீன் வாயு நிறமற்றது, எரியும் தன்மை கொண்டது.

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சத்து மிகுந்தது. அதோடு, அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது மட்டுமில்லாமல், மங்கலம் மற்றும் அமங்கல காரியங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். எத்தீலினால் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் போது, வாந்தி, குமட்டல், கண் எரிச்சல், கருத்தடைகள், மூளை, நரம்பு மண்டலம் பாதிப்பு, மனச்சோர்வு, தோல், மூக்கு, தொண்டை, நுரையீரல் போன்றவைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், புற்றுநோய் கூட ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, உணவுப் பாதுகாப்பு துறையினர். வாழைப்பழங்கள் எத்தீலினால் பழுக்க வைப்பதை தடை செய்வதோடு, அது குறித்து விழிப்புணர்வையும் வியாபாரிக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!