Perambalur: The police have found and arrested the man who stole the tractor!
பெரம்பலூர் அருகே உள்ள பெருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதனின் மகன் பிரேம்குமார் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டர் அக் 1. அன்று நிறுத்திவிட்டு சென்று அடுத்தநாள் அதிகாலை 5.00 மணிக்கு வந்து பார்த்த போது டிராக்டர் சுழல் கலப்பையுடன் காணமல் போனது.
இது குறித்து அவர் மங்களமேடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, அதே கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் மகன் ராஜசேகர் என்பவர் பிரேம்குமாரின் டிராக்டரை சுழல் கலைப்பையுடன் திருடி சென்றது தெரியவந்தது.
ராஜசேகரை கைது செய்து மங்களமேடு சப் – இன்ஸ்பெக்டர் சங்கர், காணாமல் போன டிராக்டரை பறிமுதல் செய்ததோடு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.