Perambalur: To hide and divert attention from the TASMAC scam, DMK workers will be given Rs. 10 lakh if they die unnaturally! Interview with MLA Vanathi Srinivasan
கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மற்றும் பிஜேபி மகளிரணி தேசிய தலைவியுமான
வானதி சீனிவாசன் பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. தண்டனை கொடுப்பது போன வாரமே முடிவு செய்யப்பட்டிருந்தாலும் இன்று அந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது, ஆயுள் தண்டனையும், அபராதமும் முதல் விஷயம் இந்த வழக்கை விரைவாக முடித்திருக்க கூடிய, தீர்ப்பு கொடுத்திருக்கக் கூடிய, நீதித்துறை இந்த விசாரணைக்கு வேகப்படுத்திய காவல்துறையினர் இதே மாதிரியான வேகத்தை எல்லா வழக்குகளிலும் காட்டினாள் நன்றாக இருக்கும், ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை எங்களுக்கு ஒரு சந்தேகம் என்ன இருக்கிறது? யார் அந்த சார்? என்ற கேள்விக்கு இதுவரை விடை இல்லை, அது மட்டும் அல்ல யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக இந்த வழக்கு மட்டுமே வேகமாக முடிக்கப்பட்டது என்ற சந்தேகமும் இருக்கிறது. அதனால் ஒருபுறம் தமிழக அரசு இந்த வழக்கை நாங்கள் எவ்வளவு விரைவாக முடித்து விட்டோம் என்று பாருங்கள், என சாதனையாக அவர்கள் கூறிக் கொள்வதற்கு இதில் ஒன்றும் இல்லை ஏனென்றால் இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டதா? என்கின்ற சந்தேகம் அத்தனை பேருக்கும் இருக்கிறது, அதனால் தமிழகத்தினுடைய முதல்வர் ஒன்று எல்லா வழக்குகளையும் குறிப்பாக பெண்கள் மீது வன்முறை செய்யப்பட்ட பாலியல் தொடர்பான வழக்குகள், இதே போல் ஆறு மாத காலத்திற்குள்ளாக முடிக்க வேண்டும் என்கின்ற தீவிரத்தை எல்லா வழக்குகளுக்கும் அவர் காட்ட வேண்டும். இரண்டாவது இந்த வழக்கிலே உண்மையாகவே இவர்தான் குற்றவாளியா? அல்லது வேறு ஏதேனும் ஒரு நபரை காப்பாற்றுவதற்காக இவர்களை பலிகடா ஆக்கிவிட்டாரா? என்பதற்கான பதிலையும் அவர் கொடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கேள்வி : இப்போது பள்ளிகள் திறந்து உள்ளார்கள், அடுத்தடுத்து கல்லூரிகள் திறக்க உள்ளார்கள், கொரோனா என்பது மறுபடியும் நாடு முழுவதும் ஓர் அலையை ஏற்படுத்தி வருகிறது, தமிழக அரசு தற்போது தமிழகத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் விதிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்படுமா? எப்படி?
பதில்: கொரோனாவினுடைய பாதிப்புகள் மறுபடியும் அதிகரித்து வருவதாக மீடியாக்கள் வாயிலாக அறிகிறோம். சுகாதாரத்துறை ஏற்கனவே இதில் ஒரு நல்ல அனுபவத்தை வைத்திருக்க கூடிய துறை தான், எப்படி இதனை தடுப்பது, தடுப்பு முறைகள் என்ன, மக்களுக்கு இதனை எப்படி பழக்கப்படுத்துவது. என்ன எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களுக்கே இப்போது தெரியும். கொரோனா ஒன்றும் இப்போது பயப்படக்கூடிய விஷயம் அல்ல ஆனால் அதே சமயம் தீவிர நோய் உள்ளவர்கள் குறிப்பாக உடல் பருமன் இருப்பவர்கள் சர்க்கரை நோயாளிகள் இவர்கள் அனைவரும் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் அது மட்டும் அல்லாமல் தமிழக சுகாதாரத்துறை எந்தெந்த இடங்களில், மாவட்டங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதோ அங்கு எல்லாம் உடனடியாக ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டத்தை நடத்தி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அது மட்டுமல்ல நோயினால் பாதித்தவர்கள் அலட்சியமாக இல்லாமல் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளுக்கும் ஆங்காங்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்பாடுகளை துவங்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு.
கேள்வி: மதுரையில் நடந்த கூட்டத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார், கட்சியின் உறுப்பினர்கள் இயற்கைக்கு மாறாக உயிரிழந்தால் உறுப்பினர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி கொடுப்போம் என்று தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு சில மாற்று கட்சியினர் புதிதாக தொடங்கப்பட்ட கட்சியில் இருந்து மாற்று கட்சிகளுக்கு போகிறார்கள். குறிப்பாக ஆளும் கட்சிக்கும் செல்கிறார்கள் இப்போது உறுப்பினர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கின்றோம் என்கின்ற முதல்வரின் அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: மனிதாபிமான அடிப்படையில் ஒரு ஏழை எளிய தொண்டர்களுக்கு உதவி செய்வது என்பது எல்லா அரசியல் கட்சிகளும் பண்றது தான். ஆனால், இதில், இவ்வளவு அதிகமான தொகை 10 லட்சம் அதுவும் கட்சியில் இயற்கைக்கு மாறாக இறந்தார்கள் என்னும்போது, யாரும் இறக்க கூடாது, அதற்காக இறக்க வேண்டும் என்று கூறவில்லை ஆனால், இதில் என்ன தோணுதுனா எப்படியாவது கட்சியினுடைய செல்வாக்கை அதிகரிக்க முடியுமானு தமிழக முதலமைச்சர் பார்க்கிறார். அவர் 10 லட்சம் அறிவித்தது கூட எங்களுக்கு ஆச்சரியமாக தோணவில்லை, ஏனென்றால் அரசாங்கம் முழுக்க முழுக்க ஊழல், லஞ்சம் என இருக்கும் பொழுது 10 லட்சம் என்பதெல்லாம் அவர்களுக்கு ஒன்னும் இல்லை. மாநிலத்தின் முதல்வருக்கு தெரியுமா? என தெரியவில்லை, அத்தனை அதிர்ச்சி மக்களுக்கு குறிப்பாக இந்த லஞ்சத்தாலும் ஊழலாலும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கு. டாஸ்மாக் மாதிரி கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் பணத்தை வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களின் பணத்தில் தான் டாஸ்மார்க் ஊழல் நடந்து கொண்டு உள்ளது அதற்கான விசாரணையும் நடைபெறுகிறது இதிலிருந்து எப்படியாவது மக்களோட கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்கு முதல் கட்டம், கட்சிக்காரர்களுடைய மனதை மாற்ற வேண்டும் என முயற்சி செய்கிறார் என்று நினைக்கின்றேன்.
கேள்வி: முருக பக்தர்கள் மாநாடு?
பதில்: முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டுள்ளது. நேற்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் வீட்டு தொடர்பு இயக்கம் நடைபெற்றது நானும் எனது தொகுதியில் வீடு வீடாக அந்த நோட்டீசை மக்களுக்கு விநியோகம் செய்தேன் தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும் ஆன்மீகத்துக்கு இடம் இருக்கக்கூடிய இடம், மக்கள் தர்மத்திற்கும் ஆன்மீகத்திற்கும் மிக முக்கியத்துவம் கொடுக்கின்ற மக்கள், ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் மாதிரி ஒரு சில அரசியல் கட்சிகள் குறிப்பாக இந்து மதத்தை மட்டுமே தாக்கி கொச்சைப்படுத்தி அவர்களை கேவலப்படுத்தி அவர்களது கோயிலுக்கு இடைஞ்சல் செய்வது என்பது திமுகவின் ரத்தத்திலேயே இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். அப்படிதான் அவர்களது செயல்பாடுகள் இருக்கு, குறிப்பாக திருப்பரங்குன்றம் என்றாலே முருகன் அங்கு இன்னொரு மதத்தை சேர்ந்தவர்களுக்கு உரிமை கொடுப்பது என்பது எவ்வளவு ஒரு மோசமான செயல் இதை பற்றி எல்லாம் மக்களுக்கு தெரிவிப்பதற்காக முருக பக்தர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. மிகப் பெரிய வெற்றியை நோக்கி அது செல்லும் ஒரு ஆன்மீக எழுச்சியை அது தமிழகத்தில் உருவாக்கும் என நாங்கள் நம்புகிறோம்
கேள்வி: கல்வி உரிமைச் சட்டம் RTE PORTAL
பதில்: தமிழகத்தினுடைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் பல்வேறு விஷயங்களில் முன்னெடுப்புகளை எல்லாம் நன்றாக செய்யக்கூடியவர் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி ஏழை எளிய மக்கள் கல்வி உரிமை சட்டத்தின் வாயிலாக பள்ளிகளில் இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உடனடியாக அவர் இதை போர்க்கால நடவடிக்கை போல் எடுத்து செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.
கேள்வி: ஞானசேகருக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியாக எடுத்துக் கொள்ளலாமா?
பதில்: யாரெல்லாம் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தார்களோ அது எல்லோருக்குமான வெற்றியாக நாங்கள் இதை பார்க்கின்றோம். பிஜேபியும் களத்தில் இருந்தது மற்றவர்களும் இருந்தார்கள் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் இதில் இருந்தார்கள் இதை அனைவருக்கு மான வெற்றியாக தான் பார்க்க வேண்டும், என தெரிவித்தார். அப்போது பிஜேபி மாநில, மாவட்ட, ஒன்றிய பேரூர், கிளை பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.