Purchase of milk, crop plea to denounce the refusal to grant the farmers union federation protest in Perambalur.

பால் உற்பத்தியாளர்கள் உற்பத்திசெய்யும் பால் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும், பயிர்க் கடன் பால் மாட்டுக் கடன் வழங்கவேண்டும், கிணறு வெட்ட கடன் உதவி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில செயலாளர் என்.செல்லதுரை தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது:

கொரோனா நோய்தொற்று காரணமாக பொது முடக்கத்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானம் இழந்த நிலையில் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பாலை முழுதும் கொள்முதல் செய்யாமல் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கும் மேல் பாலை திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு பால் உற்பபத்தியாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு வருகின்றனர். எனவே பால் முழுவதும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே போல் விவசாயிகள் விவசாயம் செய்ய முதலீடின்றி வங்கிகள் கொடுக்கும் பயிர்க்கடனையே நம்பி உள்ளனர். கிராமப்புற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தற்போது பயிர்க்கடன் வழங்க மறுக்கின்றனர். நகையை அடகு வைத்து பயிர்க்கடன் கேட்டாலும் வழங்குவதில்லை. இதனால் விவசாய சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

மத்திய அரசு கொரோனா காலத்தில் நிவாரண உதவியாக பால் உற்பத்தியை சிறு தொழிலாக கருதி பால் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் பயன் பெறுவதற்காக 10 லட்சம் ரூபாய் வரை பால் மாடு வாங்குவதற்கு எவ்வித பிணைய ஜாமீனும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் கடன் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவ்வாறு வழங்க வங்கிகள் முன்வரவில்லை எனவே மத்திய அரசு உத்தரவின் படி பால் சொசைட்டி செயலாளர் அளிக்கும் உறுதிமொழிக்கேற்ப 10 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்க வேண்டும். பெரம்பலூh; மாவட்டத்தை கறுப்பு பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு மாவட்ட ஊரா வளா;ச்சி முகமை மூலம் புதிய கிணறு வெட்ட விவசாயிகளுக்கு 7.90 லட்சம் கடன் வழங்குவதாக அரசு முறையாக பயனாளிகளை தேர்வு செய்யாமல் ஊராட்சி எழுத்தர்கள் மற்றும் இடைத் தரகர்கள் மூலம் ஒரு லட்சம் முதல் 3லட்சம் ரூபாய் வரை விவசாயிகளிடம் வசூலித்து ஏமாற்றி வருகின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து தடுத்து நிறுத்தி தகுதியான பயனாளிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கம்யுனிஸ்ட் கட்சி நிர்வாகி வேணுகோபால், தியாகராஜன், பகுஜன் சமாஜ் கட்சி ப.காமராசு, திராவிடா; கழகம் தங்கராசு, அக்ரி.ஆறுமுகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சர்புதீன், சிஐடியு சிவானந்தம் பி.ரெங்கராஜ் பாப்புலர், பிரண்டஆப் இந்திய முகமது அலி, தமிழ்நாடு பொதுவுடைமை கட்சி செல்வமணியன், மக்கள் அதிகாரம் சோபன்பாபு ஏஐடியுசி பி.முத்துசாமி, மார்க்சிஸ்ட் கட்சி எஸ்.பி.டி.ராஜாங்கம், எம்.கருணாநிதி, ஆர்.முருகேசன், ஏசுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சின்னசாமி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!