Ram Rath Yatra opposition : stir the VCK, SDPI, the DMK, the arrest MMK

பெரம்பலூர் மாவட்டத்தில் ராம்ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் ராம்ராஜ்ய ரதயாத்திரைக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், தமிழக சட்டசபையில் தி.மு.க.வினர் அமலியில் ஈடுபட்டதை தொடர்ந்து தலைமை செயலகம் முன்பாக தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்எல்ஏக்கள் அனைவரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து ஸ்டாலின் உட்பட தி.மு.க.,வினர் பலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதேபால் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா உட்பட பல தலைவர்கள் ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தை கண்டித்து, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்திய விசிக, எஸ்.டி.பி.ஐ, திமுக மற்றும் ம.ம.க கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்படத்தில்அடைத்து வைத்தனர். பின்னர், மாலை விடுவிக்கப்பட்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!