Registration, legal case against traders selling food items without taking FSSAI license

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

அனைவருக்கும் தரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த 05.08.2011 முதல் நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் இந்தியா முழுவதும் “உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006” அமுலில் உள்ளது. ஆகையால், இது முற்றிலும் புதிய சட்டம் அல்ல. ஏற்கனவே இருந்த சட்டத்தில் திருத்தங்களுடன் நடைமுறைக்கு வந்துள்ளன.

பழைய சட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கி வந்த உரிமத்தை புதிய சட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையே வழங்குகிறது. ஏற்கனவே உணவு வியாபாரிகளுக்கு 05.08.2011 முதல் 31.12.2017 வரை ஆணையர் அவர்களால் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது.

மேலும் உணவு பாதுகாப்பு துறை சார்பில்; ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்-2018 ஆகிய மாதங்களில் பதிவு மற்றும் உரிமம் எடுப்பதற்கு விழிப்புணர்வு கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள், ஆகிய நடவடிக்கைகள் மேற்கொண்டும், இதுநாள் வரை பதிவு மற்றும் உரிமம் எடுக்காதவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிhpவு 63 – ன் படி நோட்டீஸ் கொடுத்து வழக்கு தொடரப்படும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!