Return items that are not in use, including the setup box: Collector V. Santh

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

தமிழகத்தில், கடந்த 2011-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கொண்டுவரப்பட்டது. அனலாக் முறையில் அரசு கேபிள் டிவி சிக்னல் கொடுத்து கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2017 அக்டோபர் முதல் டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டது.

தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 198 அரசு கேபிள ஆப்ரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ்கள் பெற்றுள்ளனர். மேற்படி, அரசு கேபிள் ஆப்ரேட்டர்கள் மூலம் சுமார் 50 ஆயிரத்து 796 அரசு செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறை அமல்படுத்தியதும் அரசு டிஜிட்டல் கேபிள் டிவிக்கு சந்தா தொகை அதிகமாக இருந்ததால், சிலர் தனியார் டிஜிட்டல் நிறுவனத்திற்கு மாறிவிட்டனர்.

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்தது. அதன்படி, கேபிள் டிவி வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.130- மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி சேர்த்து ரூ.154- வசூலிக்கப்படுகிறது. அரசு செட்டாப் பாக்ஸ்களில் சுமார் 200 சேனல்களை கண்டுகளிக்கலாம். தனியாரைவிட குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

செட்டாப் பாக்ஸ்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைக்கேற்ப அரசு செட்டாப் பாக்ஸ்கள் இருப்பும் உள்ளது. அரசு செட்டாப் பாக்ஸ்கள் பெற்ற சந்தாதாரர்கள் செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருத்தாலோ அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு குடிபெயர;ந்து சென்றாலோ, அரசு வழங்கிய செட்டாப் பாக்ஸ்களை சம்பந்தப்பட்ட ஆபரேட்டர;களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

அரசு வழங்கிய இலவச செட்டாப் பாக்ஸ்கள் என்பது, பொது மக்கள் கேபிள் ஒளிபரப்பினை மாத சந்தா கட்டணம் செலுத்தி பார்ப்பதற்கு மட்டுமே தவிர செட்டாப் பாக்ஸ்களை உரிமை கோர இயலாது. எனவே அரசின் இலவச செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது.

அதனால் அரசு வழங்கிய இலவச செட்டாப் பாக்ஸ்களை பொது மக்கள் பயன்படுத்தாமல் இருந்தால் செட்டாப் பாக்ஸ் மற்றும் ஏ.வி கார்டு, ரிமோட், பவர் அடாப்டர் ஆகியவற்றை அப்பகுதிலுள்ள அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். சந்தாதாரர்களிடம் செயலிழக்கம் செய்யப்பட்ட அரசு செட்டாப் பாக்ஸ்களை ஆபரேட்டர்கள் பெற்று அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களிடம் செட்டாப் பாக்ஸ்களை திரும்ப பெறும் போது செட்டாப் பாக்ஸ்-வுடன் ஏ.வி கார்டு, ரிமோட், பவர் அடாப்டர் அனைத்தையும் சேர்த்து வாங்கி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். உபகரணங்களில் ஏதேனும் இல்லாமல் இருந்தால் அதற்கான தொகை கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் இருந்தே வசூல் செய்யப்படும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!