Return overseas on Perambalur Forced isolation due to coronavirus fear; Officers action !!

பெரம்பலூர் அருகே வெளிநாடு சென்று திரும்பிய பெண் உட்பட 2 பேர் வீதிகளில் உலாவிவர்களை, அதிகாரிகள் பிடித்து கட்டாயமாக தனியமைப்படுத்தினர்.

பெரம்பலூர் துறைமங்கலம் கேகே நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் (மருதமுத்து மனைவி செல்வமணி (வயது 50)) கடந்த மாதம் சிங்கப்பூரில் உள்ள அவரது மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். மீண்டும் கடந்த மாதம் 12ஆம் தேதி பெரம்பலூர் திரும்பிய அவரை சுகாதாரத்துறையினர் தனிமை படித்தி வைத்திருந்தனர். இதற்காக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், அக்கம்பக்கத்தினருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் வரும் 9-ஆம் தேதி வரை இவ்வாறு தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அப்பெண் அவ்வாறு நடந்து கொள்ளாமல், கடைகளுக்கு செல்வது, அருகில் வசிப்பவர்களின் வீடுகளுக்கு சென்று பேசுவது என்று வீதிகளில் வருவதும் போவதுமாக இருந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் நேரில் சென்று செல்வமணியை தனி வாகனத்தில் அழைத்து வந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனோ தடுப்புக்கான தனி வார்டில் சேர்த்தனர். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல, பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய வாலிபர் ஒருவர் (சங்கர் மகன் தர்மரஜ்( வயது 26) ) கடந்த 15ம் தேதி துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரம் துறையினர் அறிவுருத்தியிருந்த நிலையில் அதனை மீறி கிராமப்பகுதி முழுவதும் சுற்றி வந்துள்ளார். தகவலறிந்து சென்ற காவல் துறையினரும் சுகாதார துறையினரும் அவரை பிடித்து அவரது வீட்டிலேயே கட்டாயமாக தனிமைப்படுத்தி வைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!