Solar pump sets for SC farmers at 70 per cent subsidy: Department of Agricultural Engineering Information

வேளாண்மைப் பொறியியல் துறை விடுத்துள்ளள தகவல்:

பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 5 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட திறந்தவெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவீத அரசு மானியத்தில் செயல்படுத்த நிதிஒதுக்கீடு பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெறப்பட்டுள்ளது.

2020-21-ஆம் நிதிஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 199 சூரியசக்தியில் இயங்கும் மோட்டார் பம்புசெட்டுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூரியசக்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரைத்திறன் வரையுள்ள ஏசி மற்றும் டிசி நீர்மூழ்கி பம்புசெட்டுகள் மற்றும் தரைமட்டத்தில் அமைக்கும் மோனோபிளாக் பம்புசெட்டுகள், இது வரைமின் இணைப்பு பெறப்படாத நீh;ப் பாசனத்திற்கான ஆதாரங்களுக்கு விவசாயிகளுக்கு 70 சதவீதமானியத்தில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்படுகிறது

தமிழ்நாடுமின் உற்பத்தி மற்றும் பகிh;மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்புக் கோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் அவர்களுடைய மூதுரிமையை துறக்கவேண்டிய அவசியமில்லை. தங்களுக்குரிய இலவச மின் இணைப்புமுறை வரும்பொழுது சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மதக் கடிதத்தை சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்கவேண்டும்.

இதுவரை இலவசமின் இணைப்புக் கோரி விண்ணப்பிக்காத விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தி பம்புசெட்டுகளை அமைத்திட, இலவச மின் இணைப்பு கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை மின் கட்டமைப்புடன் வரும் காலங்களில் இணைத்திட விரும்பும் விவசாயிகள், இலவசமின் இணைப்பு கோhp தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிh;மான கழகத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்திட விண்ணப்பம் அளிக்கும் பொழுது, சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை நுண்ணீர் பாசனத்துடன் இணைத்திட உறுதிமொழி அளித்திடவேண்டும். வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள், கரை இடப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள், நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது.

மேற்கண்ட தொலைவிற்குள் நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெறவெண்டும். மேற்படி வரம்பிற்குள் உள்ள நீர் ஆதாரங்களுக்கு சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் பொழுது பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்றினை இணைத்திடவேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற ஆர்வமுடைய விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), தண்ணீh; பந்தல், பெரம்பலூர் அலுவலகம் (99940 36222) அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக செயற்பொறியாளர் (வே.பொ), (94432 14280) அலுவலகங்களில் தொடர்புகொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!