struck by lightning at the woman killed today at perambalur District
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒகளுர்கிராமம் பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்த ரெங்கநாதன் மனைவி செந்தமிழ்செல்வி (53) விவசாயம் செய்து வருகிறார்.
மேலும், உப தொழிலாக மாடுகள் வைத்துள்ளார் வழக்கம் போல் நேற்று ஒகளூரில் இருந்து மண்டபம் செல்லும் வழியில் உள்ள காட்டு பகுதியில் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி சென்று பின்னர் மாலை தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார், அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது அப்போது மின்னல் தாக்கி செந்தமிழ்செல்வி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சேகர் மங்களமேடு போலீசில் புகார் அளித்தார் புகாரை ஏற்று பிரேத பரிசே தனைக்கு அவரது உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.