Students can stay in hostels and write Govt. Public exams: Perambalur Collector


பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எதிர்வரும் ஜுன் 15 அன்று தொடங்கப்படுவதை முன்னிட்டு, பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் வழிகாட்டுதலுக்கிணங்க, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளின் கீழ் இயங்கும் 11 பிற்படுத்தப்பட்டோர், 15 மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளும், 36 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பள்ளி மாணவ-மாணவிகள் விடுதிகள் எதிர்வரும் ஜுன்.11 அன்று மீள திறக்கப்படவுள்ளன.

அவ்விடுதிகளில் மாணவ – மாணவியர்கள் தங்கி அரசுப் பொதுத் தேர்வு எழுதும் வகையில் நோய்த்தொற்று ஏற்படாதவாறு, விடுதிகள் நன்கு தூய்மை செய்யப்பட்டு, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, அரசுப் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ – மாணவியர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு விடுதிகளில் தங்கி 10 மற்றும் 11-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!