Talk trainers can apply for positioning coaches to professional practitioners
பெரம்பலூர் : ஒருங்கிணைந்த அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய இயன்முறைப் பயிற்சியாளர்கள், தொழில் சார் பயிற்சியாளர்கள், பேச்சுப் பயிற்சியாளர்கள் பதவிகளுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைந்த அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய இயன்முறைப் பயிற்சியாளர்கள், தொழில் சார் பயிற்சியாளர்கள், பேச்சுப் பயிற்சியாளர்கள் மதிப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
மேற்கண்ட பதவிகள் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கியக் கல்வி திட்டம், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக மாதம் ஒன்றிற்கு ரூ.15 ஆயிரம்- மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக தொpவு செய்யப்படவுள்ளது.
அதன்படி, இயன்முறை பயிற்சியாளர்களுக்கு குறைந்தபட்சம் இளங்கலை பிசியோதெரபி பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்களும், தொழில் சார் பயிற்சியாளர்களுக்கு குறைந்தபட்சம் இளங்கலை தொழில் சார் பயிற்சி பட்டப் படிப்பில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்களும்,
பேச்சுப் பயிற்சியாளர்களுக்கு குறைந்த பட்சம் இளங்கலை செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நிபுணர் பட்டப்படிப்பு அல்லது இளங்கலை பேச்சுத்திறன் பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிபெற்ற, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.10.2017க்குள் தங்களுடைய முழு விவரங்களுடன் (கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்று நகல்களுடன்) முதன்மைக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.