the different accidents: two dead on the spot! One person injured !! near in Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள குன்னம் பகுதியில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் பட்டதாரி ஆசிரியர், மற்றும் விவசாயி ஆகிய இருவர் பரிதபமாக உயிர் இழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கரம்பியம் கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன் ( வயது 37) இவர், பெரம்பலூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மாலை அரியலூரிலிருந்து தனது மோட்டார் சைக்களில் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது குன்னம் கிராமத்திற்கும் அண்ணா நகருக்கு இடையே வந்து கொண்டிருந்த போது, பெரம்பலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி அதிவேகமாக எதிரே வந்த கார் ஒன்று எதிர்பார விதமாக  நேருக்கு நேர் மோதியதில் ஆசிரியர் திருமுருகன் தலை நசுங்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த, குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்த அவர்கள், சீர்காழியை சேர்ந்த கார் டிரைவர் லெனின் ( வயது 25) என்பரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன ஆசிரியர் திருமுருகனுக்கு அட்சயா என்ற மனைவியும், கருண்யா, என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.

இதே போன்று, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சீராநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 45) விவசாயி . இவரது மனைவி செல்வராணி (வயது 40) இருவரும் பைக்கில், பெரம்பலூர் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

அப்போது குன்னம் அருகே தங்க நகரம் சென்று கொண்டு இருந்த போது மர்மான முறையில் விபத்து ஏற்பட்டு, விபத்தில் பழனிவேல் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த அடிப்பட்ட செல்வராணி பெரம்பலூர் அரசுமருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்து எவ்வாறு நடந்தது குறித்தும்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பழனிவேல் உடலை உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!