The Government should abandon the government schools. VCK Leader Thirumavalavan
அரசுப் பள்ளிகளை மூடுவதை அரசு கைவிட வேண்டும் வி.சிக. தலைவர் திருமாவளவன் பெரம்பலூரில் பேச்சு
விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அலுவல் காரணமாக பெரம்பலூர் நட்சத்திர ஹோட்டலில் தங்யிருந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் பள்ளிகளை உருவாக்கிய பெருமை, பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை கட்டமைத்து கொடுத்த பெருமை பெருந்தலைவர் காமராஜரையே சாரும். இன்று தமிழகத்தில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை பெருகி இருப்பதற்கும், கடை கோடி மக்களும் கல்வி பெற முடியும் என்ற சூழலில் அமைவதற்கும் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்புதான் காரணம். ஆனால், இன்றைய நிலையில், தனியார் பள்ளிகள் பெருகி இருக்கிற அளவிற்கு, தனியார் பள்ளிகள் ஆதிக்கம் மேலாங்கி இருக்கின்ற நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இதனால், அரசுப்பள்ளிகள் ஆங்காங்கே மூடப்பட்டு வரும் அவலமும் நிகழந்து வருகின்றன. இது பெருந்தலைவர் காமராஜருக்கு நாம் இழைக்கும் துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே, அரசுப் பள்ளிகளை மூடும் போக்கை அரசு கைவிட வேண்டும், போதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட வேண்டும். பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என பேசினார். பின்னர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.