The government should only apply for e-service in order to receive 8th of the Social welfare Scheme:Perambalur Collector V. Santha Information
பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் 8 திட்டங்களுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். அதன்படி, இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய மாற்றுதிறனாளிகள் உதவித்தொகை, ஆதரவற்ற விதவைகள் உதவித்தொகை, ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, ஆதரவற்ற மாற்றுதிறனாளிகள் உதவித்தொகை, திருமணமாகாத 50 வயதிற்கு மேற்பட்ட ஏழைப்பெண்களுக்கான உதவித்தொகை, முதலமைச்சர் உழவர்பாதுகாப்பு திட்ட உதவித்தொகை ஆகிய 8 திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!