பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் இன்று திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடந்தது. அதில் 226 பேர் பல்வேறு கோரிக்கைள் கொண்ட மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
இந்திய தொழிலாளார் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவின் சுருக்கம்:
தனியார் பள்ளி ஓட்டுநர்களுக்கும் பிராவிடண்ட் பண்ட் மற்றும் ஈ.எஸ்.ஐ மற்றும் உள்ளிட்ட நலவாரிய சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக ஓட்டுனர்களையும் அரசு நலவாரிய திடடங்களில் பதிவு செய்திட வேண்டும், நிலுவை சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை கொடுத்தனர். அதே போன்று
லாடபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் கொடுத்துள்ள மனு :
பெரம்பலூரில் 106 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் வெட்டப்பட்ட ஜார்ஜ் வாய்க்காலை சீரமைத்து மழைநீரை சேகரிக்கும் வகையில் செப்பனிட்டு நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் செய்து தர கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே போன்று, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள சாத்தனுரில் கல்மரப்பூங்காவிற்கு செல்லும் பாதையை சீரமைத்து கொடுத்து கல்மரப் பூங்காவை பார்க்க வருகை தரும் பார்வையாளர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வலியுறுத்தி சாத்தனூரை சேர்ந்த சத்தியராஜ் என்பவர் மனு கொடுத்துள்ளார்.