arrested Robbery robbed in various locations in Perambalur
பெரம்பலூரை பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பெரம்பலூர் நகரில் பல்வவேறு இடங்களில் தொடர்ந்து பூட்டியிருக்கும் வீடுகளில் திருடி போனது. இதனால் போலீசாரும், பொதுமக்களும் திருடணை கண்டுபிடிக்க முடியாததால் கடும் அவதிப்பட்டு வந்தனர். இன்று மதியம் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் இரும்பு கம்பியுடன் வலம் வந்து கொண்டிருந்தார்.
சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்த பெரம்பலூர் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித் (வயது 20) என்பதும், பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டப்பகுதிகளில் கைவரிசையை காட்டி கொள்ளையிட்டதை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் ஓட்டுனரான ரஞ்சித் யூ டியூப்பை பார்த்து திருட பயிற்சி எடுத்து திருடி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிவித்தார்.
அதன் பேரில் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் ரஞ்சித்தை நீதிபதி உத்திரவின் பேரில் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கப் பணம் குறித்து போலீசார் இன்னும் தகவலை வெளியிடவில்லை.