The target is to provide 8 million free gas connections in the Prime Minister’s Minister Ujjwala Yojana
இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 8 கோடி இலவச எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஐஓசி அதிகாரி தெரிவித்தார்.
பெரம்பலூரில் நடந்த பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜானா திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்கும் பொருட்டு எரிவாயு முகவர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட பின்னர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எரிவாயு விற்பனை பிரிவு முதுநிலை மேலாளர் ஜெயசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
மத்திய பெட்ரோலியம் மற்றம் எரிவாயுத்துறை அமைச்சகம், கோடிக்கணக்கான ஏழைப்பெண்கள் பயன் பெறும் வகையில் பிரதமரின் உஜ்வாலா யோஜானா என்ற புதிய திட்டம் அறிமுகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நாடு முழுவதும் 5 கோடி பெண்களுக்கு மூன்றே ஆண்டுகளில் இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் 2020க்குள் 8 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு முன்பணம் இன்றி அளிக்கப்படும் ஒவ்வொரு எரிவாயு இணைப்புக்கும் மத்திய அரசின் சார்பில்
ரூ1, 600 மானியம் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இது வரை 3 கோடியே 6 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
கேஸ் ஏஜென்சீஸ் முகவர்கள் தங்கள் தத்து எடுத்துள்ள கிராமங்களில் வரும் 20ம்தேதி விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இதில் வீடு வீடுடாக சென்று கேஸ் இணைப்பு இல்லாத வீடுகளை கண்டறிந்து அக்குடும்ப பெண்களிடம் இலவச எரிவாயு இணைப்பு குறித்தும், பெண்களின் உடல் நலன் பாதுகாப்பு, வேலைப்பளுவை குறைத்தல், சமையல் நேரம் குறைப்பு, சமையல் எரிவாயு வழங்குவதன் மூலம் ஊரக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தல் போன்றவை குறித்து எடுத்துரைத்து எரிவாயு இணைப்பு வழங்க முனைப்புடன் செயல்படவுள்ளனர் என்றார். பேட்டியின்போது கேஸ் முகவர் கஜேந்திரன், பிரபாகரன், சங்கர், லெனின் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.