The Teachers of the “Classroom Handbook” in the Perambalur are attentive to the gravity
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின் போது, வகுப்பறை கையேட்டின் படி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வகுப்பறை கையேட்டின் படி பள்ளிகள் செயல்பட்டதால் பெரம்பலூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. எனவே மற்ற மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பள்ளி கல்வித்துறையின் பாட அட்டவணையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பெரம்பலூர் மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ள “வகுப்பறை கையேடு” நடைமுறையை கைவிட்டு, தமிழகம் முழுவதும் பின்பற்றப்படும் கலைத்திட்டத்தை பெரம்பலூர் மாவட்த்தில் நடைமுறைப்படுத்தி மாணவர் நலன் காத்திட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம், நீதிபோதனைகள் பாடவேளைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.