Theft in 2 houses, including bank manager in Perambalur
பெரம்பலூர் நகரில் நள்ளிரவில் தேசியமைய மாக்கப்பட்ட வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான டிவி, மற்றும் லேப்டாப் கொள்ளையடித்துவிட்டு, மற்றொரு வீட்டிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையிலுள்ள நேரு நகரில் வசிப்பவர் பினில் இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி (ஐ.ஓ.பி) ஒன்றில் மேலாளராக உள்ளார். இன்று விடுமுறை என்பதால் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் ஒரு லட்சம் மதிப்பிலான எல்.ஈ.டி., டிவி மற்றும் 75 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இவர் தனியாக வசிப்பதால் நகை பணம் ஏதும் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.
இதேபோல் பினில் வீட்டருகே வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியரான கனகராஜ் என்பவரது வீட்டின் பூட்டையும் உடைத்துள்ள கொள்ளையர்கள் அங்கு எதுவும் இல்லாததால் திரும்பி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் பெரம்பலூர் கணபதி நகரில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் கொள்ளை நிகழ்ந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் அரங்கேறியுள்ள கொள்ளை சம்பவத்தால் பெரம்பலூர் நகர பொது மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!