Three arrested for selling banned lottery tickets in Perambalur
பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக வந்த தகலின் பேரில் பெரம்பலூர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் புதிய மதன கோபாலபுரத்தைச் சேர்ந்த கல்கண்டு மகன் கருப்பையா (35), மதிவாணன் மகன் பிரபாகரன் (35) மற்றும் குரும்பலூர் சேர்ந்த சின்னையா மகன் சுதாகர் (39) ஆகியோரை வளைத்து பிடித்தனர். அதோடு, அவர்கள் விற்பனைக்கு பயன்படுத்திய லாட்டரி சீட்டுகளையும் ரொக்கப் பணம் ரூ. 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது அவர்கள் மீது வழக்குப்பதிவு போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.