Tirupur district collector K.S.Palanisami agriculture projects examined today.

திருப்பூர் : வேளாண்மைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், தும்பலப்பட்டி, நந்தவனம்பாளையத்தில், பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அரசுத் திட்டம் உதவித் தொகை 2017-18-ன் கீழ் மல்பெரி பரப்பு, புழு வளர்ப்பு குடில் நிலை, புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் சொட்டு நீர்ப்பாசனம் என சுமார் 1.40 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.2,36,000 மதிப்பில் மானிய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மல்பெரி வளர்ப்பினையும்,

வேளாண்மைத் துறையின் சார்பில் குண்டடம், சங்கப்பாளையத்தில் சுமார் 5.00 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.39,350 மதிப்பில் மானிய உதவியுடன் தென்னை மறு நடவு மற்றும் புத்துயிரூட்டுதல் திட்டத்தில் நடவு செய்யப்பட்ட தென்னை மரங்களையும்,

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் சூரியநல்லூரில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நுண்ணீர்பாசன திட்டத்தின் கீழ் சுமார் 0.50 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.42,336 மதிப்பில் மானிய உதவியுடன் வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும்,

வேளாண்மைத் துறையின் சார்பில் வெள்ளியம்பாளையம் சிறுகிணர் பகுதியில் தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம் சார்பில் ரூ.23,500 மதிப்பில் மானிய உதவியுடன் பயிர் மற்றும் தானிய சாகுபடியுடன் கூடிய ஆடு வளர்ப்பு கூடத்தினையும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து அரசு அளிக்கின்ற மானிய உதவியினை விவசாயிகள் நல்ல முறையில் பெற்றுக்கொண்டு வேளாண் உற்பத்தியினைப் பெருக்கி வளம் பெற வேண்டுமென அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, வேளாண்மைத் துறையின் சார்பில் சூரியநல்லூரைச் சார்ந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தமிழ்நாடு கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ் மானிய உதவியுடன் ரூ.5 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, அரசு அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!