To Apply for State Chief Minister Sports Award, Perambalur Collector V.Santha Info!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையட்டு வீரர்கள், 2 சிறந்து பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1.00 இலட்சம் வீதம், ரூ.10,000- மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கி ஒவ்வொரு நிதியாண்டிலும் ( ஏப்ரல்-1 முதல் மார்ச்-31 முடிய ) வழங்கி வருகிறது.

விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல்-1 முதல் மார்ச்-31 முடிய) வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10,000- க்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இத்திட்டத்தின்படி, 2018-2019-ஆம் ஆண்டிற்கான (காலம் – 01.04.2015 முதல் 31.03.2018 வரை) மற்றும் 2019-2020-ஆம் ஆண்டிற்கான (காலம் – 01.04.2016 முதல் 31.03.2019 வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர்.

இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத் துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.

இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது. ஒருவர் காலமாகும் பட்சத்திலும், இவ்விருது வழங்கப்படும். விருதிற்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இவ்விருதிற்காக கருத்தில் கொள்ளப்படும். விளையாட்டு வீரா;கள், வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின்
நகல்களை சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும், உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பித்தல் வேண்டும். இவ்வருதிற்காக பரிந்துரை செய்யப்படுபவா;கள் மேற்காணும் விதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விளையாட்டுப் போட்டிகளின் பட்டியல்கள் : ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் உலக வாகையர் போட்டிகள் (4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டுதோறும்).

சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் காமன்வெல்த் வாகையர் போட்டிகள் (4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டுதோறும்). தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு இணையம் நடத்தும் தேசிய வாகையர் போட்டிகள்,

மேலும் அழைப்புப் போட்டிகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் கருத்தில் கொள்ளப் படாது. முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்களில் பதக்கமும் அதாவது உலகக் கோப்பை, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப்போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். போட்டிகளில் பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும்.


மேலும், . 2018-2019 மற்றும் 2019-2020-ஆம் ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகளான 1.4.2015 முதல் 31.03.2018 மற்றும் 01.04.2016 முதல் 31.03.2019 முடிய பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும். தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளின் சாதனைகள் கருத்தில் கொள்ளப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு கழகம், மாவட்ட விளையாட்டு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், முதன்மை உடற்கல்வி ஆய்வர் (ஆடவர் (அ) மகளிர் ) மூலமாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனர் ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர் ), ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும், விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர்களுக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். (www.sdat.tn.gov.in ) விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் “முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்“ என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்திற்கு 14.02.2020 தேதிக்குள் வந்து சேர வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!