Trichy DIG Balakrishnan has opened a refurbished Home Guard Police office in Perambalur.

பெரம்பலூர் கடைவீதியில் இருந்த பழைய நகர காவல் நிலையம் மராமத்து பணிகள் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது. அதில் பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகம் நடத்த திட்ட மிடபட்டு, திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தலைமை வகித்து ஊர்காவல்படை அலுவலகத்தை இன்று காலை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் நகரில் சமீபத்தில் நடந்த தொடர் கொலைகளில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அதோடு இந்த கொலை சம்பவங்களால் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் பெரம்பலூர் நகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் பட்டியல் தயாரிக்கப்மட்டு வருகிறது, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊர்டங்கினால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாது, உரிய அனுமதி இல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு குறுக்கு வழிகளிலோ அல்லது சிறுசிறு சாலைகள், சந்து வழியாக சென்றாலும் அவர்களையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் , என தெரிவித்தார். விழாவில் போலீஸ் டிஎஸ்பி கென்னடி, மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி ராம்குமார் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் , பாரத் கார்த்திகேயன், 007 ஸ்டுடியோ இமயவரம்பன், மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!