Venture theft at the Perambalur government employee’s home: police investigation
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள கணபதி நகரை சேர்ந்தவர் கருப்பையா, மின் வாரிய அலுவலராக உள்ளார். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.5,500 ரூபாய் ரொக்க பணத்தை திருடி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் திருட்டு சம்பவங்களால் பெரம்பலூர் நகர் குடியிருப்பு வாசிகள், பொது மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து களவு போன மீட்டுத் தர காவல் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.