Village Self-Governance: Livelihood, Skill Development Project Completion Ceremony in Perambalur
கிராம சுயராஜ்ய இயக்கத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் பசும்பலூர், பிம்பலூர், திருவாலந்துறை, தேவையூர், வெங்கலம், எசனை, ஆலம்பாடி, மேலப்புலியூர், அத்தியூர் வயலப்பாடி, எழுமூர், அசூர், சித்தளி, காடூர் வடக்கு மற்றும் தெற்கு, சிறுகன்பூர், டி.களத்தூர், கொளத்தூர் ஆகிய 19 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த கிராமங்களில் உள்ள குடியிருப்புக்களுக்கு எரிவாயு இணைப்பு எல்இடி பல்புகள் வழங்குதல், அந்த கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாதிச்சான்று வழங்குதல், கிராமங்களை தூய்மையாக பராமரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அன்னல் அம்பேத்கரின் பிறந்த நாள் முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா. சந்தரகாசி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையேற்று சிறந்த சுய உதவி குழுக்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கி சிறப்பாக பணியாற்றிய அரசுத் துறை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.
பின்னர், அனைத்துத் துறைகளின் சார்பில் அரசு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர் மகளிர் திட்ட இயக்குர் சு. தேவநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.