Voice Call service over Coronavirus Infection: Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்;

சமூக பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்கு அமல்படுத்தபட்டு மக்களின் நடமாட்டத்தை குறைத்து, கொரோனோ நோய் தொற்று பரவுவதைத் தடுத்து மக்கள் நலன் காக்கவும், மக்களின் களையவும், இந்நோய் தொற்று குறித்து உரிய தெளிவு பெறவும் குரல் வழி சேவையை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசின் கொரோனா குறித்த சுயதகவல் பதிவு மற்றும் விரைவு நடவடிக்கை அமைப்பின் 9499912345 என்ற குரல் வழி சேவையில் இந்த எண்ணிற்கு தொடர்புகொண்டால் அதில் பதிவுசெய்யப்பட்ட குரல் கொரோனா பற்றிய தனிநபர் மற்றும் பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதுடன், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என விளக்கம் அளிக்கும்.

எனவே, பெரம்பலூh; மாவட்ட பொதுமக்கள் தங்களது கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு மேற்கண்ட எண்ணை தொடர்புகொண்டு, தங்களை பாதுகாத்துகொள்ளவும் மேலும், அரசின் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு துணையாக இருக்க வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!