Will win to municipality and town panchayat elections: former minister of Paranjyothi Talk on MGR birthday pubic meeting!

பெரம்பலூர் வானொலித் திடலில் அஇஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான (எம்.ஜி.ராமச்சந்திரன்) எம்.ஜி.ஆரின் 103 வது நாள் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நகர அதிமுக சார்பில், நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி தலைமையில் நடைபெற்றது. என்.டி சந்திரமோகன் வரவேற்றார்.

கழக அமைப்புச் செயலாளரும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான எம்.பரஞ்ஜோதி, பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் , மாவட்ட மாணவரணி செயலாளரும், பெரம்பலூர் எம்.எல்.ஏவுமான ஆர். தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.பிக்கள் மா.சந்திரகாசி, ஆர்.பி மருதைராஜா மாவட்ட பொருளாளர் பூவை.தா.செழியன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

அப்போது முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான எம்.பரஞ்சோதி பேசியதாவது;

இந்த கடுமையான பனியிலும், தொண்டர்களின் எழுச்சியை பார்க்கின்ற நேரத்தில், பெரம்பலூர் மாவட்டம் அம்மா உடைய கோட்டைதான் என்று நிரூப்பித்து கொண்டிருக்கிறது. நம்முடைய மாவட்ட செயலாளர் குறிப்பிட்டதை போல நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், நாம் இழந்திருக்க கூடிய வாய்ப்பை, வரக்கூடிய நகர சபை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறக்கூடிய அளவிற்கு இன்றைக்கு அஇஅதிமுக கழக தொண்டர்கள், தயாராகி கொண்டிருக்கிறார்கள் நம்மால் உணர முடிகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை சில காரணங்களுக்காக அந்த வாய்ப்பை இழந்திருக்கலாம், ஆனால், இன்றைய தினம் புரட்சித் தலைவரின் 103வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நமது அம்மா உயிரோடு இருந்த நேரத்தில், புரட்சித் தலைவரின் நூற்றாண்டு விழாவை, தமிழகம் முழுவதும் எழுச்சியோடு நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால், அவர் நம்மை விட்டு மறைந்து விட்டார்கள், அம்மாவின் ஆட்சியை நடத்திக் கொண்டு நமது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறப்பாக நடத்தியவர்கள் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். நமது புரட்சித் தலைவரின் சிறப்புக்களை எல்லாம், எனக்கு முன் பேசிய நிர்வாகிகள் அத்துனை பேரும் எழுச்சியோடு எடுத்து வைத்தார்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்பவர் ஒரு அதிசயம், அவருடைய அந்த தோற்றம், எம்.ஜி.ஆரை விட அழகானவர்கள் இல்லை என்பதுடன், அந்த அளவிற்கு வசீகரமான தோற்றமும் இல்லை. திரைதத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெற்றவர். எம்.ஜிஆருக்கு இருந்த மனிதநேயம், தர்மசிந்தனை எந்த மனிதனுக்கும் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆரின் சிறந்த சத்துணவு திட்டத்தை தமிழகத்திற்கு தந்தார். குறுநில மன்னர்களை போல் இருந்த முன்சீப், கர்ணம் முறையை ஒழித்து வருவாய் துறையில் கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவியை உருவாக்கி புரட்சியை ஏற்படுத்தியவர் என்பதை இந்த நாடு மறந்து விடாது. 1967 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில், எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு இருந்த போஸ்டரை தமிழ்நாடு முழுவதும் ஒட்டித்தான் திமுக ஆட்சிக்கு வந்ததை எல்லோரும் அறிவார்கள். அந்த சம்பவத்தில் எம்.ஜி.ஆரின் குரல் வளம் பாதிக்கப்பட்டது. அப்போது கடுமையான பயிற்சி செய்து திரைப்படத்துறையில் மீண்டும் சாதனை படைத்தவர். அவர் நடித்த காவல்காரன் மிகப் பெரிய வெற்றியை பெற்றது என்பது தமிழகத்தின் வரலாறு. கடைசிப்படம் வரை சொந்தக் குரலிலேயே பேசி நடித்தவர் எம்.ஜி.ஆர். அவருடைய மயங்கியவர்கள்தான் நம் தமிழக மக்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக நிகழ்ந்தவர். கருணாநிதி ஆட்சியையும், திமுக கட்சியையும் தனது குடும்ப சொத்தாக மாற்றிய காரணத்தினால்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அஇஅதிமுக கட்சியை தொடங்கினார். அந்த காலகட்டத்தில், எம்.ஜி.ஆரின் திரைப்படம் வேண்டுமானல் நூறு நாட்கள் ஓடும், ஆனால், எம்.ஜி.ஆரின் கட்சி நூறு நாட்களை தாண்டாது என கேலி கிண்டலும் பேசினார் கருணாநிதி. ஆனால், எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும் வரை கருணாநிதி ஆட்சிக்கு வரமுடியாத வரலாற்றை படைத்தவர் எம்.ஜி.ஆர். அதன் பின்னர் புரட்சித் தலைவி தொண்டர்களுக்கு தாயாக கட்சியை வழி நடத்தி பொற்கால ஆட்சிழய வழங்கினார்கள். நம்முடைய நேரம் அவர்களை இழந்துவிட்டோம். நமது அம்மா கூறியதை பல நூற்றாண்டுகள் அஇஅதிமுக தமிழகத்தில் இருக்கும் என்று தெரிவித்த எண்ணங்களை நிறைவேற்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் வழிநடத்தி செல்வதை கண்கூடாக பார்க்கிறோம். வரும் நகர்மன்ற தேர்தலில் 4 பேரூராட்சிகளும், நகராட்சியிலும், அதிமுக தொண்டர்கள் தீவிர உழைப்பால் வெற்றி பெற்று பதவியில் அமருவார்கள் என பேசினார்.

மாவட்ட அவைத் தலைவர் நெய்க்குப்பை ஆர்.துரை இணைச் செயலாளர் எம்.ராணி, துணைச் செயலாளர் கு.லட்சுமி, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் , மற்றும் பேரூர், கிளைக் கழக பொறுப்பாளர்கள், நகர வார்டு பொறுப்பாளர்கள், சின்னராஜேந்திரன் உள்ளிட்ட கட்சினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 3வது வார்டு செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!