Woman doctor attempts sleeping pills due to family problem in Perambalur Intensive care !!
பெரம்பலூர் சாமியப்பா நகரை சேர்ந்தவர் சொப்னா ( வயது 30 ), இவர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அவரது கணவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சொப்னா நேற்றிரவு தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிறுவாச்சூரில் தனியார் மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப்பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.