Women’s Day Celebrations on behalf of CITU working women and Janayaga mathers sangam on Perambalur
சர்வதேச மகளிர் தினத்தையொட்டிபெரம்பலூர்-அரியலூர் மாவட்ட சிஐடியுஉழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிஅலுவலகத்தில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
மாதர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் எ.கலையரசி தொடங்கி வைத்தார். மாவட்டசெயலாளர் பி.பத்மாவதி முன்னிலை வகித்தார்.
அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.மணிமேகலை தலைமை வகித்தார். சாதிய பாகுபாட்டைமுறியடிப்பதில் பெண்களின் பங்குஎன்றதலைப்பில் மாதர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கீதா உரையாற்றினார். பெண்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் சிஐடியுஉழைக்கும் பெண்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.மகாலட்சுமி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது பெண்களுக்கு 8மணிநேர வேலை என்பதை போராடி பெற்ற இந்தமார்ச் 8 ஆம் தேதி நாளையே சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
பொருத்தமான இடத்தில் தேவையானஆயுதமாக பெண்களை மத்தியஅரசும், மாநிலஅரசும் பயன்படுத்திவரும் இந்தவேளையில் 1853 ஆம் ஆண்டுமுதல் 2018 ஆம் ஆண்டு வரை பெண்கள் எந்த உரிமையை பெற்று இருக்கிறார்கள் என்றுணர்ந்து பெண்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க ஒன்றுபட்டு முன்னோக்கி செல்ல இந்த மகளிர் தினத்தில் உறுதி ஏற்க வேண்டும் என்று கூறினார்.
சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி மற்றும் நிர்வாகிகள் எஸ்.அகஸ்டின், இராஜகுமாரன் மற்றும் மாதர் சங்கம் பாக்கியம், சி.ஆதிலட்சுமி, ஆர்.சவீதா, கே.மேனகா, எஸ்.மீனா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.