Workers’ Joint Action Committee at Perambalur condemned the federal budget
மத்திய அரசின், பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நேற்று மாலை 5 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கருப்பு கொடியேந்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர்கள் ஆர்.அழகர்சாமி சிஐடியு ஆர்.ரெங்கசாமி, எல்பிஎஃப், எ.சின்னசாமி ஹெச்.எம்.எஸ், என்.தியாகராஜன் ஏஐடியுசி ஆகியோர் தலைமை வகித்தனர்.

பட்ஜேட்டில் பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரான அம்சங்களை நீக்க வேண்டும், ராணுவதளவாட தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்,

நிரந்தர தொழிலாளர்களை அகற்றி தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் முறையை புகுத்தக்கூடாது, கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதியம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிர்வாகிகள் சிஐடியு ஆர். இராஜகுமாரன் எஸ். அகஸ்டின், சி. சண்முகம், எம்.பன்னீர்செல்வம். ஹெச்.எம்.எஸ், மின்னல் எல்பிஎஃப் செல்வராசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!