Youth Uprising Meeting at Veppur near Perambalur on the occasion of MK Stalin’s birthday

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா நேற்றிரவு இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் அகரம் சீகூரில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி இராஜேந்தின்- கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குத்தாலம் க. அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு , வேப்பூர் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில், ஒன்றிய செயலாளர் தி. மதியழகன் தலைமை வகித்தார், ஊராட்சி செயலாளர் அ.கெளதமன் வரவேற்றார்.

மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி. இராஜேந்தின் – கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குத்தாலம் க.அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அதில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக எப்போதும் குரல் கொடுப்பதும்,2011 ல் ஏற்பட்ட பிரச்சினை இதுநாள் வரை தமிழகத்தில் தீராமல் இருக்கிறது.

இனி வரும் காலங்களில் பொதுமக்கள் நல்ல முடிவு எடுத்து தி.மு.க. வை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வராக்க வேண்டுமென்று பேசினார்கள். பேருந்து கட்டணம் உயர்வு, ரேசன் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை பொதுமக்கள் தலையில் சுமத்தாமல் ஆட்சி செய்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியாகும். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம. இராஜ்குமார், மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் டாக்டர் செ.வல்லபன், பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் எஸ்.அண்ணாதுரை, அரியலூர் மாவட்ட அவைத்தலைவர் தங்க.துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர் நூருல்ஹிதா இஸ்மாயில், ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ. ஜெகதீசன், பாடாலூர் சோமு. மதியழகன், மருவத்தூர் சி.இராஜேந்திரன், நகர செயலாளர் எம்.பிரபாகரன், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், பேரூர் செயலாளர் ஏ.எஸ்.ஜாகீர் உசேன், முன்னாள் சேர்மன் அழகு.நீலமேகம், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எம்.சண்முகம், எஸ்.தனராஜ், பி.காமராஜ், எஸ்.பி.செல்வராஜ், மீனா அன்பழகன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் து.ஹரிபாஸ்கர், சன்.சம்பத், அ.கருணாநிதி, ப.செந்தில்நாதன், ஆர்.வேணுகோபால், துணை அமைப்பாளர்கள் ஏ.எம்.கே.கரிகாலன், எ.ரசூல் அகமது,கு.க.அன்பழகன், எம்.ஏ.செல்வராசு, களரம்பட்டி சதீஷ், ஆர்.அருண்குமார், தலைமை கழக பேச்சாளர் மு.விஜயரத்தினம், நகர இளைஞரணி அமைப்பாளர் அ.அப்துல் கரீம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பி.வரதராஜ், ஜே.தேவராஜ், ஆர்.கவியரசு, வி.பெரியசாமி, மகேந்திரன், ஊராட்சி கழக செயலாளர்கள் என்.ஆறுமுகம், பெரு.கருப்பையா, பி.அறிவுச்செல்வன், சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட மீனவரணி துனை அமைப்பாளர் அ.மெய்யன்துரை நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!