பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,234 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 28 லட்சம் மதிப்பில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட அகரம் சீகூர், வயலப்பாடி, துங்கப்புரம் (தெ) உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ் அகரம் சீகூர் கிராமத்தில் 1,081 பயனாளிகளுக்கும், வயலப்பாடி கிராமத்தில் 1,263 பயனாளிகளுக்கும், துங்கப்புரம் (தெ) கிராமத்தில் 890 பயனாளிகளுக்கும் என மொத்தம் 3,234 நபர்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி, சிறப்பு அமலாக்கத்திட்ட தனித்துணை ஆட்சியர் பி. ராசாமி, வேப்பூர் ஒன்றியக்குழுத் தலைவர் நா. கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.