பெரம்பலூரில் அக்னி நட்சத்திர வெயிலில் பொது மக்களை கடுமையாக வாட்டி வந்த நிலையில் இன்று திடீரென பெய்த மழையினால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த 4ந்தேதிதொடங்கிய அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள், உள்ளிட்ட பொது மக்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை,வாலிகண்டாபுரம், லப்பைக்குடிக்காடு, பாடாலூர், கொளக்காந்த்தம், செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று திடீரென பெய்த கனமழையின் காரணமாக பூமி குளிர்ந்து பொது மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.