அடுத்த வாரத்தில், இந்திய வங்கிகள், பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அக்.21 ஆம் தேதி ஆயுதபூஜை,22 ஆம் தேதி விஜயதசமி, 23 ஆம் தேதி மொகரம், 24 ஆம் தேதி மாத இறுதி சனிக்கிழமை, 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என வங்கிகளுக்கு ஐந்து நாட்கள் அடுத்தடுத்து வரிசையாக விடுமுறை வருகிறது.
இதனால், பள்ளி, வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
மக்களின் வசதிக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் இயங்கும். பணம் போடுவதற்கான மின்னணு சேவை மையங்கள் செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.