பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே இன்று அதிகாலை 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் சாலையைக் கடப்பதற்காக நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.