அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டுமென மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசு இயற்றியுள்ள வரைவு அணை பாதுகாப்பு மசோதாவில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, அணைகள் பாதுகாப்பு சட்டமசோதாவைநிறுத்திவைக்க கோரி முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் சட்டபேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.