பெரம்பலூர்: நீதி மன்ற உத்தரவுப் படி ஜீலை 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியதை தொடர்ந்து,
இரு சக்கர வாகன ஓட்டிகளின் அத்தியாவசிய தேவையை கருதி தலைக் கவசத்தின் அதிகபட்ச விலையை விட அதிகமாக விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்வது தொடர்பாக வந்த புகார்களின் பேரில் தொழிலாளர் ஆய்வு துறை பணியாளர்கள் குழு 45 கடைகளில் ஆய்வு செய்தது.
அதில், மூன்று கடைகளில் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை ரு:.750ஃ-யை விட ரூ:1200-க்கும் ரூ.575- யை விட ரூ:1400-க்கும், ரூ.550- யை விட ரூ.700-க்கும் அதிகமாக விற்பனை செய்தது கண்டறியப்பட்டு மூன்று நிறுவனங்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனவே வியாபாரிகள் எக்காரணத்தை கொண்டும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு தலைக்கவசம் விற்பனை செய்ய வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பாக தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வியாபாரிகள்,
எடையளவுச் சட்டம் 2009 மற்றும் பொட்டலப் பொருள்களின் விதிகள் 2011 -ன் படி சட்ட விதிகளுக்குட்பட்டு விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தவறும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள், எனவும் எச்சரிக்கப்படுகிறது;
விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்வதை பொதுமக்களாகிய நுகர்வோர்கள் அறிந்தால் 9445398759 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.