பண்டிகை என்றாலும், வீட்டு நிகழ்ச்சிகள் என்றாலும் பூக்கள், பழங்களுக்கு அடுத்தப்படியாக முக்கியத்துவம் கொடுப்பது பலகாரங்கள், இனிப்பு வகைகளுக்குத்தான்.

தேர்த் திருவிழா நாட்களில் இருந்து துவங்கிய இனிப்பு வகைகள் பிறந்த நாள் விழா சீர் வரிசை, வளைகாப்பு நிகழ்ச்சிகளுக்கு இனிப்பு பதார்த்தங்களை பாரம்பரியமாக பயன்படுத்தி வருகிறோம். பதார்த்தங்கள் பெரும்பாலும் கடலைமாவு, மைதா மாவு, அரிசி மாவு வகைகளையே பெரும்பாலும் மூலப் பொருட்களை கொண்டதாக இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்கள் விதவிதமான பதார்த்தங்களை தங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்தனர். சுவையாகவும், சுகாதாரமாகவும், நீண்ட நாட்களுக்கு கெடாத வகையிலும் தயாரித்து வந்துள்ளனர்.

தற்போது வீட்டில் செய்வதை போலவே எந்திரங்களில் தயாரித்து கொடுக்கின்றனர். அவை என்னதான் வீட்டில் தயாரிக்கப்பட்டவை என்று விளம்பரம் செய்தாலும் வீட்டில் பாட்டிமார்கள் தயாரித்ததை போன்று இல்லை.

நவநாகரீக வளர்ச்சியில் பெண்கள் வேலைக்கு செல்லுவதால் அதிக நேரம் இன்மையால் கடைகளில் விற்கும் பதார்த்தங்களை வாங்கி பண்டிகைகளை கொண்டாடும் நிலைமை வந்து விட்டது.

திருப்பதி லட்டு கிலோ ரூ.140 –

கடலைமாவை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் லட்டு திருப்பதியை தவிர வேறு எங்குமே சுவை, மணம், தரத்தை கொடுக்க முடியாது என்பதை அனைவரும் அறிந்ததே! திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் லட்டு ஒரு கிராம் லாபத்துடன் தயாரிக்க கிராம் ஒன்றுக்கு 14 பைசா செலவாதாகவும், ஆயிரம் கிராம் அதாவது கிலோ ஒன்றுக்கு ரூ.140 செலவு ஆகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அந்த முதல் தரமுள்ள லட்டு விலையே கிலோ: ரூ.140- தான்.

ஆனால், திருநெல்வேலி, சாத்தூர் சங்கரன் கோவில் ஆகிய ஊர்களில் இன்னமும் சுவை மாறாமல் கிலோ ஒன்றுக்கு ரூ.150க்கே கடைக்காரர்கள் விற்கிறார்கள். அல்வா விலையும் கிலோ. ரூ.150 – அப்படியே தான் விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் அப்படி செய்தது, இப்படி செய்தது எனக் கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றி கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.

சுமை கால் பணம்! சுமை கூலி முக்கால் பணம்!!

நிறைய கடைகளில் கடலைமாவு, மைதா சர்க்கரை கலந்து கலர்கலராக தயாரிக்கப்பட்ட இனிப்புகளை அவர்கள் நிறுவன பெயர் அச்சிடப்பட்ட அட்டைபெட்டிக்கு கிப்ட் பாக்ஸ் என்ற பெயரில் பெட்டிக்கு தகுந்தவாறு ரூ.80 லிருந்து ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர். அது எப்படி என்றால். இதில் ஸ்வீட் விற்பதை விட அட்டைப் பெட்டியில் நல்ல லாபம் பார்த்து விடுகின்றனர். கிப்ட் பாக்சில் வித்தியாசமான ஸ்வீட் வகைகள் உள்ளதா என்றால் அதுவும் கிடையாது. பழைய மொந்தையில் புது கள் என்பதை போலத்தான். ஸ்வீட் விலை ரூ.200 என்றால் அட்டைப் பெட்டி விலை ரூ.100 என விற்பதுதான் வேடிக்கை

தீபாவளி மருந்து!

சில கடைக்களில் குறிப்பிட்ட அளவு இனிப்பு வகைகளை வாங்கினால் தீபாவளி மருந்து என்று ஒன்ற கொடுப்பார்கள். அது எதற்கு என்றால் இனிப்புகள் செரிமானம் ஆகாமல் வயிற்றினுள் தங்கி உடல் உபாதைகளை உண்டுபண்ணும். ஆதனை சரி செய்யவே தீபாவளி மருந்து விலைக்கோ இலவசமாககோ கொடுப்பார்கள்.
இதில்தான் சிக்கல் உள்ளது. உடலில் செரிமானம் பாதிக்கும் வகையில் கடலை மாவு, டால்டா, வனஸ்பதி, நெய் அல்லது விலங்கு கொழுப்பு எண்ணெய்களால் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை சாப்பிடும் வயிற்றுப் போக்கு கூட ஏற்படுவதுண்டு. எனவே, இனிப்புகளை சாப்பிடுவதில் கவனமாக இருங்கள்.

டாக்டர் பரிந்துரைக்கிறரா!

யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றாலோ, சத்துக்கள் தேவைப்படுகிறது என்றாலோ ஒரு கிலோ ஸ்வீட் வாங்கி சாப்பிடங்கன்னு சிபாரிசு செய்யமாட்டார். பழங்கள், பழசாறுகளை அருந்துங்கள் என்றே அறிவுறுத்துவார். அதிக இனிப்புகளை எடுத்து கொள்பவர்களுக்கு சர்க்கரையால் அசதி, கடலை மாவால், மூட்டுவலி, மைதா மாவால் பல்வேறு உடல் உபாதைகளையும் ஏற்படுத்துவதை அனைவரும் அறிந்ததே !

கண்ணதாசன் தன்னுடைய புத்தகத்தில், கடலை மாவையும், புளியையும் உடலுக்கு அதிக உட்கொள்வது நல்லதல்ல, மிக குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்து இருப்பார்.

எனவே, இனிப்பு வகைகளை குறைத்து உங்களுக்கு தீபாவளி பண்டிகையில் பழங்களை அதிகப்படுத்துங்கள் . அது எந்தப் பழமாக இருந்தாலும் பின் விளைவையோ செரிமான பிரச்சனையோ உண்டு பண்ணாது. பரிசாக பழங்களையே கொடுப்பதற்கு முக்கியத்துவம் அளியுங்கள் அதனை குளிர் பதனப்பெட்டியிலோ வைத்துக் கூட அதிக நாட்களுக்கு பயன்படுத்துவார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!