அதிமுக அரசு 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.கோவையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பந்தய சாலை பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களைவையில் எம்பிக்களே இல்லாத திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு குறித்து பேசுவதேன் என கேள்வி எழுப்பினார். வருமான வரித்துறை சோதனைகள் வழக்கமான ஒன்று என்றும் இதனால் ஆட்சிக்கு எந்தப் பாதிப்பும் வராது எனவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.