பெரம்பலூரில், அதிமுக மாவட்ட இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது.
முகாமிற்கு, இளைஞரணி மாவட்ட செயலர் முத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன், ஒன்றியக்குழுத் தலைவர் து. ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உறுப்பினர் சேர்க்கையை தொடக்கி வைத்து, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொருளாளரும், சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் அ.அருணாசலம் பேசியதாவது:
இளைய சமுதாயத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளை அதிகளவில் உறுப்பினராக சேர்த்து கட்சியை வலிமைப்படுத்த வேண்டும்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதா மாண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என கருத்து கணிப்புகள் வெளிவந்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் சகுந்தலா கோவிந்தன், மாவட்ட நிர்வாகிகள் பூவை த. செழியன், ராணி, ஒன்றிய செயலர்கள் என். கே. கர்ணன் (ஆலத்தூர்), எஸ். கண்ணுசாமி (வேப்பந்தட்டை), மாவட்ட அணி செயலர்கள் எம்.என். ராஜாராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.