பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில், பெரம்பலூர் மாவட்ட அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் அதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலர் ஏ. முத்துசாமி தலைமை வகித்தார்.
நகரச்செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன், சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் அ. அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கட்சி பேச்சாளர் எம். விஸ்வலிங்கம் தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே அரசின் சாதனை விளக்க துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில், ஒன்றிய செயலர்கள் என்.கே. கர்ணன், பி. கண்ணுசாமி, எஸ். கிருஷ்ணசாமி, மாவட்ட அணிச்செயலர் எம்.என். ராஜாராம், செல்வக்குமார், கார்த்திகேயன், ராஜேஷ்வரி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பூவை த. செழியன், நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், ஒன்றியக்குழுத் தலைவர் து. ஜெயக்குமார், பாடாலூர் ஊராட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.