பெரம்பலூர் : பெரம்பலூரில் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் வாக்கு சாவடி நிலை முகவர்கள், வாக்கு சேகரிப்பாளர்கள் நியமனம் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டம் நேற்று பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றிய செயலாளருமான மருதராஜ் தலைமை வகித்தார். சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, ச.ம.உ. தமிழ்ச்செல்வன், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் வீட்டு வசதி நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது: ஏழை,எளிய அடிதட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை மக்களின் குழந்தைகளும் படிக்கவேண்டும், அப்படி படித்தால் தான் அவர்களின் வறுமை ஒழியும், வறுமை ஒழிந்தால் தான் நாடு வளரும்.
வரும் 1.1.2016ம் தேதியில்18 வயது பூர்த்தியடையும் அனைவரையும் புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும், அதற்காக பெரம்பலூர் தொகுதியில் 317பூத்களும், குன்னம் தொகுதியில் 304 பூத்களுக்கும் வாக்கு சேகரிப்பாளர்கள் நியமிக்க வேண்டும். அவர்கள் வரும் 14ம்தேதி வரை புதிய வாக்காளர்கள் சேர்க்க வேண்டும். மேலும் அரசு சார்பில் வரும் 4ம்தேதி வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அரசின் சாதனைகளை வாக்கு சாவடி வாரியாக ஒவ்வொருவீடாக சென்று வாக்களர்கள் அனைவரிடத்திலும் நேரடியாக எடுத்து செல்லும் பணியை சிறப்பாக செய்யவேண்டும் என்றார்.
இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சகுந்தலா, யூனியன்சேர்மன் ஜெயக்குமார், நகராட்சிதலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி, மாநில மீனவரணி இணை செயலாளர் தேவராஜன், மாவட்ட நிர்வாகிகள் பூவைசெழியன், ராணி, மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், வக்கீல்குலோத்துங்கன், செல்வகுமார், கார்த்திக்கேயன், ராஜேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் வடிவேல், ஆலம்பாடிஜெகதீஸ், ஜெ.பேரவை மாவட்ட இணை செயலாளர் குணசீலன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் வெண்மணி காமராஜ், எசனை பன்னீர்செல்வம், வக்கீல் ராமசாமி,காடூர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன் நன்றி கூறினார்.