பெரம்பலூரில், மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் தமிழக அரசின் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க துண்டறிக்கை விநியோகிக்கும் நிகழ்ச்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மாவட்ட மகளிரணி செயலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.
சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்செல்வன், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழக அரசின் நான்காண்டு சாதனை குறித்து துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.
இதில், நகர செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், ஒன்றிய செயலர்கள் என்.கே. கர்ணன், கிருஷ்ணசாமி, கண்ணுசாமி, ஒன்றியக்குழுத் தலைவர்கள் து. ஜெயக்குமார், க. ஜெயலட்சுமி, என். கிருஷ்ணகுமார், மாவட்ட அணி செயலர்கள் எம்.என். ராஜாராம், செல்வக்குமார், கார்த்திக்கேயன், எம். வீரபாண்டியன், சிவப்பிரகாசம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சின்ன. ராஜேந்திரன், நகர நிர்வாகிகள் மைதிலி, கா. சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.