பெரம்பலூர், : பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றோர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத அதிமுக அரசை கண்டித்தும், பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலையை கட்டுப்படுத்த கோரியும் கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கா. கண்ணபிரான், மாவட்டத் தலைவர் நீலமேகம், வன்னியர் சங்க மாநில துணை செயலர் ராஜேந்திரன், ஒன்றிய செயலர் பிரபு, நகர செயலர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.