Construction of barrage at Anukkur at an estimated cost of Rs 3.434 crore: Perambalur Collector inaugurated.
நீர்பாசனத்துறை அமைச்சர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் அனுக்கூர் கிராமத்தில் வேதநதி ஆற்றின் குறுக்கே ரூ.343.40 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை அறிவித்தார். அறிவிப்பினை தொடர்ந்து 11.09.2023 அன்று அரசாணை (எம்.எஸ்) எண்.67 நீர்வளத் (எஸ்2) துறையின் படி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் இன்று (07.02.2024) பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.க.கற்பகம் அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன், அவர்கள் முன்னிலையில் பணி துவக்கி வைக்கப்பட்டது.
எசனை கிராமத்தில் உள்ள எசனை ஏரியின் உபரி நீர் வாய்க்கால் வேதநதியாக உற்பத்தியாகி எசனை, வடக்குமாதவி, அனுக்கூர் மற்றும் சிறுவயலூர் கிராமத்தின் வழியாக சென்று சிறுவயலூரில் கோனேரி ஆற்றின் வலது புறத்தில் கலக்கிறது.
அனுக்கூர் கிராமத்திற்கு அருகே வேதநதியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுவதால் வேதநதி ஆற்றின் நீரானது வீணாவதை தடுப்பதுடன், தடுப்பணை சுற்றியுள்ள பகுதியில் 95 கிணறுகள் நீர் மட்டம் உயர்ந்து மறைமுக ஆயக்கட்டு 741.00 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைவதுடன் குடிநீர் ஆதாரமும் அதிகரிக்கும்,
நீர்வளத்துறை பணியாளர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மகாதேவிஜெயபால், ஒப்பந்தாரர் தழுதாழை சி. பாஸ்கர், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், ஊராட்சித் தலைவர் முதலி மற்றும் திமுக கிளை பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.