பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அனுக்கூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் ராஜேந்திரன் (39) கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு மது போதையில் இருந்த ராஜேந்திரன் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டாராம். இதையறிந்த அவரது பெற்றோர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை துரைசாமி அளித்த புகாரின்பேரில், மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.