பெரம்பலூர் அருகே தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி கட்டப்பட்டிருந்த 123 கொடிகள் அகற்றம்: தேர்தல் பறக்கும் படையினர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை.தமிழ்செல்வன் பெரம்பலூர் அருகே குரும்பலூர் பாளையம் கிராமத்தில் இன்று காலை பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். இதனையொட்டி சாலையோரங்களில் அதிமுக சார்பில் 20 கொடிகள் கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி நூற்றுக்கும் மேற்படப்ட கொடிகள் கட்டப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து குரும்பலூர் பாளையம் கிராமத்திற்கு வட்டவழங்கல் அலுவலர் பழனிச்செல்வன் தலைமையில் சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அனுமதி பெற்றதை விட அதிகாமாக நடத்தை விதிமுயை மீறி கட்டப்பட்டிருந்த 123 கொடிகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிமுக கொடிகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.